நீலகிரி மாவட்ட ஆட்சியராக கடந்த 2017ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக அவர் முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக பதவி வகித்தார். 


நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு சுற்றுச்சூழலை காக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை இந்தியா பணியை சிறப்பாக முன்னெடுத்தது என பொதுமக்களிடையே அவரது பணிக்கு வரவேற்பு கிடைத்தது.


தொடர்ந்து, யானை வழித்தடங்களை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த மூவர் குழுவோடு இணைந்து ஆக்கிரமிப்பு செய்த ரிசார்ட்டுகளை எல்லாம் அப்புறப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார்.


கடந்த 2019ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யும் பணிகள் நடந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ''உச்ச நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் அவரை இடமாற்றம் செய்யக் கூடாது'' என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.


இதனையடுத்து  நிர்வாக ரீதியில் அவசர மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய கடந்த வாரம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.


இச்சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக திவ்யா நீண்ட விடுப்பில் சென்றதால் கீர்த்தி ப்ரியதர்ஷினி நீலகிரி மாவட்ட ஆட்சியராக (கூடுதல் பொறுப்பு) பொறுப்பேற்றார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Maanaadu Review : ’வந்தான், வென்றான், சிம்புமாநாடு படம் எப்படி இருக்கு..?


Red Alert: தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்': வேறு எங்கெல்லாம் மழை கொட்டும்?


Shiva Shankar Health: சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு நிதியுதவி - சோனு சூட் உறுதி


Red Alert: தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்': வேறு எங்கெல்லாம் மழை கொட்டும்?


Schools, Colleges Leave: விட்டாச்சு லீவு... நாளை எங்கெங்கு பள்ளி, கல்லூரி விடுமுறை... மாலை முழு அப்டேட் இதோ!