தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு தினங்களாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கிடையே இன்று உருவாகும் என்று கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தென் சீன கடலில் இருந்து கிழக்கு திசை காற்று மிக வலுவாக வந்துகொண்டிருப்பதால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், சிவகங்கை,மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழை பரவலாக பெய்துவருகிறது. தூத்துக்குடிக்கு ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளையும் மழை பெய்யக்கூடும் என்பதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமென அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் திருவாரூர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Maanaadu Review : ’வந்தான், வென்றான், சிம்பு’ மாநாடு படம் எப்படி இருக்கு..?
20வது ஆண்டை நெருங்கும் சிம்பு: 11 ஆண்டுகளுக்குப் பின் வெற்றியை ருசித்த சோகம்.. எங்கே சறுக்கினார்?
Shiva Shankar Health: சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு நிதியுதவி - சோனு சூட் உறுதி