இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக நாட்டில் உச்சபட்சமாக கடந்த மாதம் தினசரி 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகள். தடுப்பூசிகள் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தற்போது கொரோனாவால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை  ஒரு லட்சமாக குறைந்துள்ளது.


கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் சிறியவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினரும் உயிரிழந்த சோகங்களும் அரங்கேறியது. நாட்டில் பல பகுதிகளில் குடும்பத் தலைவர்கள் அல்லது குடும்பத் தலைவிகள் அல்லது பெற்றோர்கள் இருவரும் உயிரிழந்த சோக நிகழ்வுகளும் நடந்தது.


நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளதாக கடந்த வாரம் புள்ளிவிவரங்கள் வெளியானது. தமிழகத்தில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு கல்லூரிப் படிப்பு வரை இலவசம் என்றும், அவர்களின் பெயரில் ரூபாய் 5 லட்சம் வைப்பு நிதி என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், பல இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.






சட்டங்கள் மற்றும் வழக்குகளுக்கு பரிந்துரை வழங்கும் இந்திய சட்ட அமைப்பாக செயல்பட்டு வருகிறது அமிகஸ். இந்த அமைப்பு தமிழ்நாட்டில் கொரோனாவின் நிலை மிகவும் கடினமாக உள்ளது. அவர்கள் கொரோனாவால் தாய் அல்லது தந்தை, அல்லது பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளை மட்டும் அடையாளம் கண்டு வருகின்றனர் என்று கூறியுள்ளனர். மேலும், தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் குழந்தைகளை அடையாளம் காண்பது திருப்திகரமாக உள்ளது. இதை அவர்கள் `லிவ் லா’ என்ற தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


கொரோனாவால் நாடு முழுவதும் குழந்தைகளின் கல்வி, உணவு, சத்துணவு முறைகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் பராமரிப்பும் பல பகுதிகளில் சிரமம் ஆகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், அவர்களின் கல்வி, வாழ்க்கை முறை, பாதுகாப்பு குறித்த விவகாரங்களிலும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : எதிரிகளைக் கதறவிடும் 'ஜெயரஞ்சன்' யார் தெரியுமா?