கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதற்கு முன்பாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய புதிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 27 மாவட்டங்களில் மட்டும் அமலில் இருக்கும்.
கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், இந்த 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்விவரங்கள் பின்வருமாறு:
* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
இன்றைய 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி. மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைதப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
* இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
* அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள னுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட னுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம் பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்குமாறும், இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் செல்வதைத் தவிர்க்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா அறிகுறிகள் தென்பட்டவுடன், உடனேஅருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமெனவும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.