Lok Sabha Election 2024: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் போட்டி- விசிக அறிவிப்பு
தொல் திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களிடம் பேசியதாவது: “கடந்த சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டதை அடுத்து, நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட பானை சின்னத்தையே ஒதுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் விசிக, தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, கட்நாடகா, ஆந்திரா ஆகிய 5 மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது”. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் படிக்க
TN Agriculture Budget 2024: விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகள் - வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு
மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணைய்வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-2025-فا ஆண்டிலும் இத்திட்டத்திற்காக 55 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியானது. மேலும் படிக்க
TN Agriculture Budget 2024: கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு திட்டம் - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்
2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உள்ளிட்ட அறிவிப்புகள் இன்று வெளியானது. மேலும் படிக்க
நீதிபதியாக தேர்வான கூலி தொழிலாளி மகன்; காண பெற்றோர் இல்லை..கலங்கிய கண்கள்
மயிலாடுதுறை அருகே தாய், தந்தையருடன் பள்ளி பருவம் முதல் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து கடும் வறுமையில் நீதிபதியாக இளைஞர் சாதித்துக் காட்டியுள்ளார்.மேலும் படிக்க
Sterlite Reopen : ’ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் கடும் முயற்சி’ சிறப்பு சட்டம் இயற்ற அரசுக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்..!
தூத்துக்குடி என்றால் கடல், உப்பு, முத்து, துறைமுகம் என்ற அடையாளங்களும் பாரதியார், வ.உ.சி., கட்டபொம்மன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களும் திருச்செந்தூர் முருகன் கோயிலும் மக்கள் மனதில் உதிக்கும். ஆனால், இப்போதெல்லாம் தூத்துக்குடி என்றாலே ஸ்டெர்லைட் ஆலையும் அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும்தான் நினைவுகளில் நிழலாடுகிறது. 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட காரணமாக இருந்தது ஸ்டெர்லைட் ஆலை. அதுமட்டுமில்லாமல், எண்ணற்றோர் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். சுற்றுச் சூழல் மீட்டுருவாக்கம் செய்ய முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட, ஆலையை கடந்த 2018ல் பூட்டி சீல் வைத்தது தமிழ்நாடு அரசு.மேலும் படிக்க