TN Agriculture Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி,
- 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்
- 2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு
- ஒரு கிராமம் ஒரு பயிர்" திட்டம் - 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்
- ஏற்றுமதிக்கு உகந்த மா ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு
- சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு
- தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு.
- நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு
- பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்
- ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த "தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம்" செயல்படுத்தப்படும்
- கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
- சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ. 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
- தூத்துக்குடி, வேலூர், தருமபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 250 ஏக்கரில் பேரிட்சை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்படும்
- மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்
- ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.
- புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
- புதிய பலா ரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு
- ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு
- விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு
- சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு
- பாரம்பரிய காய்கறி இரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்