திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனதையொட்டி அக்கட்சியை சேர்ந்தவர்கள் கொண்டாடி வரும் நிலையில், திமுக அரசின் ஓராண்டை விமர்சிக்கும் வகையில் சென்னை முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.


மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. திமுக ஆட்சி ஓராண்டு ஆனதையொட்டி கருணாநிதி படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடமும் முதலமைச்சர் வாழ்த்து பெற்றார். இதனைத்தொடர்ந்து, மாநகர் பேருந்தில் திடீரென்று ஏறி ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு, தலைமைச்செயலகத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை புத்தகத்தை வெளியிட்டார்.


Junmoni Rabha : மோசடி செய்த வருங்கால கணவர் அதிரடி கைது.. பாராட்டு மழையில் எஸ்.ஐ ஜுன்மோனி ரபா


இந்த நிலையில், திமுக அரசின் ஓராண்டை விமர்சிக்கும் வகையில் சென்னை முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில், விடியா ஆட்சியின் ஓராண்டு வேதனை. இருளில் தவிக்கும் தமிழகம். மின்மிகை To மின்வெட்டு என்று எழுதப்பட்டுள்ளது. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் இந்த போஸ்டர் ஒட்டுப்பட்டுள்ளது.






முன்னதாக, தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுகவின் ஓராண்டு ஆட்சி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். பலவற்றில் திமுக அரசின் அணுகுமுறையை கண்டு மக்கள் முகம் சுளிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் பூரண மதுவிலக்கு குறித்து திமுக பேசாததால் மக்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண