தமிழ்நாடு பாஜகவில் தனது பொறுப்பு பறிபோன நிலையில், தொடர்ந்து ட்வீட்களை போட்டு புலம்பியுள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.
தமிழகத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் புதிய பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில் தமிழ்நாடு பாஜக கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு பொறுப்பு மற்றொருவருக்கு கொடுக்கப்பட்டது. இது அந்தப் பதவியில் வகித்து வந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்ததாக தெரிகிறது
தற்போது தனது பொறுப்பு பறிபோனது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பல ட்வீட்களை போட்டு புலம்பிதள்ளியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நான் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவை உருவாக்கியதால்தான் எனக்கு பிற மொழிப் பிரிவு கன்வீனர் வழங்கப்பட்டது. இரண்டு தேர்தல்களுக்கும் முழுக்க முழுக்க கலை மற்றும் பண்பாட்டு குழுவினர் கடுமையாக உழைத்தனர். நான் சிறந்த அணியுடன் ஆசீர்வதிக்கப்பட்டேன். எனது கடின உழைப்பை மக்கள் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உண்மையாக பாஜக உறுப்பினராகவும், பூத் ஏஜென்டாகவும் எனது பணியைத் தொடர்வேன். சக்தி உள்ளே இருக்கிறது என்று நான் நம்புகிறேன். கடவுள் நம்மோடு இருக்கிறார். நான் எந்த பதவி எதிர்பார்ப்புடன் இங்கு வரவில்லை அல்லது நான் ஏமாற்றப்படவில்லை. பதவி என்பது வெறும் விசிட்டிங் கார்டு அல்ல. இது சுத்தமான கடின உழைப்பு. எனது அரசியல் பயணமும் ஆன்மிகப் பயணமும் இப்போதுதான் தொடங்கியிருப்பதாக உணர்கிறேன். இது வெறும் ஆரம்பம்.
ஊடகங்கள் என்னை அவமானப்படுத்தி தெளிவு இல்லாமல் அவமதித்தன. எதிரணியினரின் சிரிப்பு, கேலி, மிரட்டல், துஷ்பிரயோகம் மற்றும் ட்ரோல்கள் ஆகியவை புன்னகையுடன் கையாளப்படும். குஷ்பூ மேடம், அண்ணாமலை மற்றும் புதிதாக இணைந்த பாஜக உறுப்பினர்களுடன் செய்த அனைத்து ஒப்பீடுகளையும் எடுத்துக்கொள்வதற்கான அனைத்து வலிமையும் என்னிடம் உள்ளது’ எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, , கட்சி பொறுப்பு பறிபோன பின் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார். அதில், ”எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்