Vadivelu: மிக்ஜாம் பாதிப்பு.. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சம் வழங்கிய வடிவேலு

நடிகர் வடிவேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு காசோலை வழங்கினார்.

Continues below advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நிவாரணத் தொகையாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 வழங்குவதாக அறிவித்துள்ளது.  நிவாரண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Continues below advertisement

இந்நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்க கார்ப்பரேட் நிறுவனங்களும் பிரபலங்களும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் வடிவேலு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.6 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்". இவ்வாறு உதயநிதி பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க 

Fight Club Review: சிறப்பா சண்டை பண்ணாங்களா.. லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள ‘ஃபைட் கிளப்’ பட விமர்சனம்!

TNPSC Issue: ஆமை வேகம்; சைலேந்திர பாபுவுக்காகக் காத்திருக்கிறதா டிஎன்பிஎஸ்சி? என்னதான் பிரச்சினை?

Cyclone Relief Fund: வெள்ள நிவாரணத் தொகையை ரொக்கமாக கொடுக்க அனுமதி - உயர்நீதிமன்றம் உத்தரவு..

Continues below advertisement
Sponsored Links by Taboola