மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


18.05.2023 மற்றும் 19.05.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


20.05.2023 முதல் 22.05.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


அதிகபட்ச வெப்பநிலை :


18.05.2023, 19.05.2023 & 20.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3  டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.எ


குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். இதன் காரணமாக மக்கள் நண்பகல் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி ல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  


அமராவதி அணை (திருப்பூர்) 3,சூலூர் (கோயம்புத்தூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP  (கோயம்புத்தூர்), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி) தலா 2, கிளென்மோர்கன் (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), பல்லடம் (திருப்பூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்), கூடலூர் பஜார் (நீலகிரி), கெட்டி (நீலகிரி), கோயம்புத்தூர் விமான நிலையம், சின்கோனா (கோயம்புத்தூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி), பழனி (திண்டுக்கல்), கங்கவல்லி (சேலம்), பார்வூட் (நீலகிரி மாவட்டம்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்றும் வெயிலின் தாக்கம் நேற்றைய தினத்தை ஒட்டி இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்று காலை முதலே கடல் காற்று வீசத்தொடங்கியுள்ளதால் சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்து அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் குறைவாகவே பதிவாகும் என தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் வெப்பநிலை அதிகமாக தான் இருக்கும் என்றும்  கரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் 40 அல்லது 40 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகும் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சென்னை புறநகர், வேலூர், திருத்தணி ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கோவையில் யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் உயிரிழந்த விவகாரம்; ஆராய்ச்சி மையத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்