மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதேபோல் நாளை, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


10.09.2023 முதல் 11.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும்  நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில்  லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்பட்டாலும் மாலை முதல் நகரின் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக தாம்பரம், மேடவாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர், கிண்டி ஆகிய  பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதேபோல் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, தி.நகர், அடையாறு, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை பெய்தது.


மாலை நேரங்களில் காற்று மற்றும் மேகக்கூட்டங்கள் மெதுவாக நகர்ந்து கடலுக்கு செல்வதால் கடந்த சில நாட்களாக மழை மெய்து வருகிறது என்றும் நேற்றைய தினம் அதிக அளவு மேகக்கூட்டங்கள் தாம்பரம் வழியாக நகருக்குள் நுழைந்து கடலுக்குள் சென்றதால் நல்ல மழை பெய்தது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (மில்லிமீட்டரில்)


நுங்கம்பாக்கம் (சென்னை) 41.5, மீனம்பாக்கம் (சென்னை) 56.2,


சேலம் 33.0, தொண்டி_(ராமநாதபுரம்)  21.0, வால்பாறை (கோயம்புத்தூர்)  16.0, ஏற்காடு (சேலம்) 12.0,  மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 62.5, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 61.5, நியோட் பள்ளிகரணி (சென்னை) 28.2, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) 52.0, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 24.0, கோலப்பாக்கம் (காஞ்சீபுரம்) 16.0 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


Chennai Bangalore Expressway: சென்னை - பெங்களூருவுக்கு இனி 2 மணிநேரம்தான்.. ஜனவரியில் வரப்போகுது அதிவிரைவுச் சாலை..!


A Raja Complaint: மதக்கலவரத்தை தூண்டுறீங்க.. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது பறந்த புகார்