CM Stalin: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


அப்துல் கலாம் பிறந்தநாள்:


ஏவுகணை நாயகன் என போற்றப்படும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தில் இருந்து கடின உழைப்பாலும், கல்வியாலும் தன் கனவுகளை நிஜமாக்கியவர்.  இந்நிலையில், இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிலை திறக்கப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அப்துல் கலாம் சிலை அமைக்கப்பட்டுள்ளது.


அப்துல் கலாம் சிலை திறப்பு நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் சில அமைச்சர்கள் பங்கேற்றனர். சிலை திறப்பு  நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு கலந்து கொண்டனர். பின்னர், ரூ.22 லட்சம் மதிப்பில் 7 அடி உயரமுள்ள அப்துல் கலாமின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.


அப்துல் கலாம் சிலை திறப்பு:


இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள். நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 


அந்த வகையில், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பல்வேறு சிறப்புகளை கொண்ட டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




மேலும் படிக்க


Annamalai On DMK: மைதானத்தில் “ஜெய் ஸ்ரீராம்” முழக்கம் - அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி


Jayakumar: மகளிர் உரிமையை பேசும் தி.மு.க. கனிமொழியை தலைவராக நியமிக்கலாமே? ஜெயக்குமார் கேள்வி