நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 04.04.2020 ம்  அன்று காதர் மீரான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 292A, 295 A, 505 ( 2), It act 67, என 4 பிரிவுகளில் யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யபட்டு இருந்த நிலையில், இன்று அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார்.

Continues below advertisement


அவர் மீது அளிக்கப்பட்ட புகாரில், மதங்களுக்கு இடையே ஒற்றுமை குலைப்பது, சமூக விரோத கருத்துகளை வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தி.மு.க ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சைபர்கிரைம் காவல் துறையினரிடம்  புகார் அளித்தார்.


இதனையடுத்து புகாரின் அடிப்படையில் மதுரை புதூர் சூர்யாநகர் பகுதியை சேர்ந்த யூடியுப்பரும் பாஜக ஆதரவாளருமான மாரிதாஸை மாநிலத்தின் பொது அமைதியை சீர்குலைத்தல் , தமிழக அரசு மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து தனியார் தொலைக்காட்சி குறித்து போலி இமெயில் மூலம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.


Maridhas Arrest Update: மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்த உயர் நீதிமன்றம்!


மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்தது. அதேபோல மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வந்தது. 


இதற்கிடையே  தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு மாரிதாஸ் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார். இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து உத்தரவிட்டது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண