தமிழ்நாட்டில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ரம்யா பாரதி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை சரக டிஐஜியாக பிரவேஷ்குமாரும், சேலம் சரக டிஐஜியாக பிரவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐஜிக்களாக 14 பேருக்கும் ,டிஐஜிக்களாக 3 பேருக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திண்டுக்கல் சரக டிஐஜியாக ரூபேஷ் குமார் மீனா, வேலூர் சரக டிஐஜியாக ஆனி விஜயா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் காவல் ஆணையராக பாபு நியமிக்கபட்டுள்ளார். பொன்னி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுரை சரக டிஐஜியாக பொறுப்பு வகிக்க இருக்கிறார்.
மேலும், சமுக நீதி மற்றும் மனித உரிமை ஐஜியாக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மகேஸ்வரி ஐஜியாக பதவி உயர்வு பெற்று தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக நியமிக்கபட்டுள்ளார்.தஞ்சாவூர் சரக டிஐஜியாக கயல்விழி, குற்றபிரிவு ஐஜியாக காமினி நியமிக்கப்பட்டுள்ளனர்.
துரைக்குமார் ஐஜியாக பதவி உயர்வு பெற்று நெல்லை காவல் ஆணையராக நியமிக்கபட்டுள்ளார்.ஆசியம்மாள் ஐஜியாக பதவி உயர்வு பெற்று உளவுத்துறை ஐஜியாக பதவி நியமிக்கபட்டுள்ளார்.சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக கபில்குமார் நியமிக்கபட்டுள்ளார்.
அமலாக்க பிரிவு ஐஜியாக விஜயகுமாரி, லஞ்ச ஒழிப்பு துறை ஐஜியாக லலிதா லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
UPSC Question | யுபிஎஸ்சி மெயின் தேர்வு கேள்விகளால் இணையத்தில் தெறித்த மீம்கள்- என்ன காரணம்?