தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழை, வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இருப்பினும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 41 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பகல் நேரங்களில் வெளியில் சென்றால் அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். வெளியில் செல்லும் போது நல்ல நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் அல்லது நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இல்லையெனில் உடலில் நீர்ச்சத்து குறையும் அபாயம் ஏற்படும் என்றும் குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் வெளியில் செல்வ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


அதிகபட்ச வெப்பநிலை :


16.06.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.


அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 40.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து தூத்துக்குடியில் 40 டிகிரி செல்சியஸ், நாகையில் 39.4 டிகிரி செல்சியஸ், மதுரையில் 39.6 டிகிரி செல்சியஸ், கடலூரில் 39.4 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் 39.2 டிகிரி செல்சியஸ், வேலூரில் 38.7 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 38.6 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 38.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.  


சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 40.6 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 40 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் அதிகப்படியான வெயில் சென்னையில்தான் பதிவாகி வருகிறது. நேற்று 20 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.


Senthil Balaji: நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி.. 3 மனுக்கள் மீது இன்று உத்தரவு.. பரபரப்பாகும் அரசியல் களம்..!


Biparjoy Cyclone: இன்று கரையை கடக்கும் அதி தீவிர புயல் பிபர்ஜாய்.. கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்.. முழு விவரம்..