தமிழ்நாட்டில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு 10 பெண்களில் ஒருவர், மாதவிடாய் காலத்தில் துணியைப் பயன்படுத்துகிறார் என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் ஐந்தாவது பதிப்பின் தரவு சுட்டிக்காட்டுகிறது. இதன் சதவிகிதம் 13% ஆகும்.


பள்ளிகளில் சுகாதாரம் கற்றுக்கொள்கிறார்கள்


தமிழ்நாட்டில் மாதவிடாய் சுகாதாரத்திற்கான மதிப்பெண்கள் தேசிய சராசரியை விட முன்னிலையில் இருந்தாலும், சுகாதாரக் குறைபாடுள்ள சிறுமிகள் பள்ளிப் படிப்பை இடைநிறுத்துவதுடன், உடல்நலப் பிரச்சினைகளையும் சந்திக்கும் அபாயம் இருப்பதாக குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். நேற்று, Child Rights and You (CRY) என்னும் NGO மாதவிடாய் சுகாதார நடைமுறைகளுக்கும், பெண்களின் கல்விக்கும் (எழுத்தறிவு மற்றும் பள்ளிப்படிப்பு ஆண்டுகள்) வலுவான நேரடி தொடர்பு இருப்பதாகக் கூறியது.



துணி சுகாதாரமானதுதான்!


தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் ஐந்தாவது பதிப்பு (2019-21), துணியை சுகாதாரமான நடைமுறைகளில் ஒன்றாகக் கருதுகிறது. 15-24 வயதுடைய பெண்களில் கிட்டத்தட்ட 98 சதவிகிதம் பேர், மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான முறையைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்: Student Murder in Thomas Mount : ”இப்படித்தான் திட்டமிட்டு கொலை செய்தேன்” : மாணவி படுகொலை.. கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்...


பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள்


தமிழ்நாட்டில், ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்புவரை மட்டுமே படித்த பெண்களில் 96.2% பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான முறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகள் முடித்த பெண்களில் இந்த சதவிகிதம் 98.6% ஆக அதிகரித்துள்ளது.



கல்வியும் சுகாதாரம்


"நாங்கள் பணிபுரியும் அனைத்து மாவட்டங்களிலும், மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தும் பெண்களின் சதவீதத்திற்கும், அவர்களின் படிப்புக்கும் நேரடி தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளோம். பள்ளிக் கல்வியில் எத்தனை ஆண்டுகள் இருந்துள்ளனர் என்பது அவர்களின் மாதவிடாய் காலத்தில் அதிக சுகாதாரமான பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துவதில் எதிரொலிக்கிறது, "என்று தெற்கு, CRY மேம்பாட்டு ஆதரவு அசோசியேட் பொது மேலாளர் ஹாரி ஜெயகரன் கூறினார். 15 வயதிற்கு மேல், 19 வயதிற்குள் பள்ளிக்கு சென்ற பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் அதிகமாக உள்ளதென்று இந்த ஆய்வு கூறுகிறது. "எழுத்தறிவு பெற்ற பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிக சுகாதாரமான பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர்," என்று அவர் மேலும் கூறினார். 18 வயதிற்குள் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான முறைகளைப் பயன்படுத்துவதற்கான போக்கு குறைவாக இருப்பதாக சமூக சேவையாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுகாதாரமான முறைகளைத் தேர்வு செய்யாத பெண்களிடையே இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் அதிகம் காணப்படுகின்றன.