Velankanni Matha Festival:வேளாங்கண்ணி மாதா திருவிழாவுக்கு 1050 சிறப்பு பேருந்துகள்:முன்பதிவு செய்வது எப்படி..!
Velankanni Matha Festival 2024:வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு 1050 சிறப்பு பேருந்துகள் 27/08/2024 முதல் 10/09/2024 வரை இயக்கப்பட உள்ளது.

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளதாவது,
போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு 1050 சிறப்பு பேருந்துகள் 27/08/2024 முதல் 10/09/2024 வரை இயக்கப்பட உள்ளது.
Just In




இத்திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டும் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு லிமிடெட் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆக மொத்தம் 1050 சிறப்பு பேருந்துகள் 27/08/2024 முதல் 10/09/2024 வரை இயக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக, பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகின்றன. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது