கொரோனா இரண்டாவது அலையால் தமிழ்நாட்டில் மே மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
594 டாக்டர்களை காவு வாங்கிய 2வது அலை; தமிழகத்தில் 21 டாக்டர்கள் பலி!
இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையால் தமிழ்நாட்டில் மே மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல் மாதத்தில் வேகமாக பரவத் தொடங்கியது. மே மாதத்தில் உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக மே மாதத்தில் மட்டும் 10,186 பேர் உயிரிழந்துள்ளனர்.
மே மாதம் உயிரிழப்பு
1-5-2021 - 147 பேர்
2-5-2021 - 153 பேர்
3-5- 2021 - 122 பேர்
4-5-2021 - 144 பேர்
5-05-2021 - 167 பேர்
6-05-2021 - 195 பேர்
7-05-2021 - 197 பேர்
8-05-2021 - 241 பேர்
9-05-2021 - 236 பேர்
10-05-2021 - 232 பேர்
11-05-2021 - 298 பேர்
12-05-2021 - 293 பேர்
13-05-2021 - 297 பேர்
14-05-2021 - 288 பேர்
15-05-2021 - 303 பேர்
16-05-2021 - 311 பேர்
17-05-2021 - 335 பேர்
18 -05-2021 - 364 பேர்
19-05-2021 - 365 பேர்
20 -05-2021 - 397 பேர்
21-05-2021 - 467 பேர்
22-05-2021 - 448 பேர்
23-05-2021 - 422 பேர்
24-05-2021 - 404 பேர்
25-05-2021 - 468 பேர்
26-05-2021 - 475 பேர்
27-05-2021 - 474 பேர்
28-05-2021 - 486 பேர்
29-05-2021 - 486 பேர்
30-05-2021 - 493 பேர்
31-5-2021 - 478 பேர்
கடந்த 1ஆம் தேதியில் இருந்து 7ஆம் தேதி உயிரிழப்பு 200க்குள் இருந்தது. 8ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதிக்குள் 300க்குள் இருந்தது. 15ஆம் தேதியில் இருந்து 20ஆம் தேதிக்குள் 400க்குள் இருந்தது. 21ஆம் தேதியில் இருந்து 31-ஆம் தேதி வரை 400க்கு மேல் பதிவாகியுள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் 2021ஆம் ஏப்ரல் வரை 14,046 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். ஆனால், இந்தாண்டு மே மாதத்தில் மட்டும் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்டுள்ளது. மொத்த உயிரிழப்பில் 42 சதவீதம் பேர் மே மாதத்தில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2020 ஆகஸ்ட் மாதத்தில் 3,387 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததே, மாதத்தின் அதிக உயிரிழப்பாக இருந்தது. தற்போது, ஒரே மாதத்தில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி - அப்படி என்ன ஸ்பெஷல் ?