நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி மக்களுக்கு பொருளாதார ரீதியாகவும், உயிரிழப்புகள் என பெரும் இன்னல்களை ஏற்படுத்திய வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இருந்து மக்கள் மீள தடுப்பூசி ஒன்றே தீர்வு என அரசு அறிவித்து, அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு மிகவும் குறைய தொடங்கியுள்ளது. 


இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 25317 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் ஒரே நாளில் 3061 பேருக்கும், சென்னையில் 2217 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 26513 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. 




தேனி : அதிகரிக்கும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை : அச்சத்தில் மக்கள்


அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 483-ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றன. நேற்று ஒரேநாளில் கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் 490 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிமாகவும் குறைவாகவும் பதிவாகி வருகிறது. எனினும் கடந்த ஒரு வாரமாக உயிரிழப்பு எண்ணிக்கை 450க்கும் அதிகமாக உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 32,263 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்து தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாக மருத்துவ துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஆறுதல் தரும் விஷயமாக இருப்பது குணம் அடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை தான். ஏனென்றால் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதியாகும் அளவைவிட குணம் அடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மக்கள் மத்தியில் சற்று ஆறுதல் மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும் செய்தியாக உள்ளது. 


மேலும் படிக்க:சுகர் தான் ரிஸ்க்... கொரோனா உயிரிழப்புக்கு வழிவகுக்கும் நீரிழிவு - புள்ளிவிவரம் வெளியிட்ட தகவல்கள்!