தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் படிப்பில் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், விடிவி கணேஷ், நடிகை பூஜா ஹெக்டே, யோகி பாபு என திரைப்படத்தில் ஒரு திரை பட்டாளமே நடித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகியுள்ளது. நேற்று இரவில் இருந்து விஜய் ரசிகர்கள் திரையரங்கு முன்பு குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கினார். 



இன்று காலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. அதற்கு முன்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த விஜயின் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகளை வெடித்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விஜய் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திட்டமிட்டபடி காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்யை திரையில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சில திரையரங்குகளில் காலை 7 மணி சிறப்பு காட்சி டிக்கெட் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டதால் திரையிடப்படவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


Also Read | Beast Review: ‛பெஸ்ட் ஆர் ஒஸ்ட்...’ பீஸ்ட் என்ன மாதிரி படம்? சமரசம் இல்லாத சத்தியமான விமர்சனம் இதோ!


சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏஆர்ஆர்எஸ் திரையரங்கில் சிறப்புக் காட்சி கொண்டாட்டத்தின்போது சேலம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற விஜய் ரசிகர் திரையரங்கின் கண்ணாடியை கையில் குத்தி உடைத்துள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த பள்ளப்பட்டி காவல்துறையினர் அசோக்கை கைது செய்தனர். கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அசோக் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதேபோன்று சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள கைலாஷ் பிரகாஷ் திரையரங்கிலும் சிறப்பு காட்சியின் போது விஜய் ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடியை உடைத்தனர். கண்ணாடியை உடைத்த குறித்து கிச்சிப்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 



கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியது ரசிகர்கள் ரசிகர்களின் சிறப்பு காட்சி காலதாமதமாக திரையிடப்பட்டதால் ஏ ஆர் ஆர் எஸ் திரையரங்கை ரசிகர்களால் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு திரையரங்கம் சூறையாடப்பட்டது. தொடர்ந்து இரண்டு முறை அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒரே திரையரங்கம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளுக்கு முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விஜய் ரசிகர்களால் சேலம் மாவட்டத்தில் இரண்டு திரையரங்கங்கள் சேதம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.