தமிழக, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடக மற்றும் தமிழக காவிரி கரையோரங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்தது. தமிழக காவிரி கரையோரங்களிலும், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள மலை மற்றும் வன பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.
தஞ்சையில் 100 ஏக்கர் வெற்றிலை சாகுபடி பாதிப்பு - ஏக்கருக்கு 15 லட்சம் செலவு செய்து நாசம்
நேற்று காலை அதிகரித்து வினாடிக்கு 35,000 கன அடியிலிருந்து 48,000 கன அடியாக உயர்ந்தது. தற்போது மழை சற்று குறைந்ததால், நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியாக குறைந்தது. தொடர்ந்து ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வருவாய் பேரிடர், காவல், தீயணைப்பு மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் ஆற்றங்கரை பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.