TVK: அம்பேத்கர் பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடிய தமிழக வெற்றிக் கழகம்

அனைத்துக் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் நீர்மோர் முதல் வெஜிடபிள் பிரியாணி வரை அனைத்தையும் அள்ளிக் கொடுத்தனர். தர்பூசணி, வெள்ளரிக்காய், பொங்கல், பிரியாணி என பலவிதமான பொருட்களை மக்களுக்கு வாரி வழங்கினர்.

Continues below advertisement

சட்ட மாமேதை அம்பேத்கர் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு கட்சித் தலைவர்கள் வெகு விமர்சியாக கொண்டாடினர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக புதுவிதமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சேலம் அம்பேத்கார் சதுக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கர் உருவசிலைக்கு மாலை அணிவிக்க கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஈடுபட்டுள்ளனர். 

Continues below advertisement

பத்துக்கு மேற்பட்ட அரங்கங்கள் அமைத்து பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க தர்பூசணி, வெள்ளரி, நீர்மோர், குளிர்பானங்கள், உள்ளிட்டவைகளை வாரி வழங்கினர். இது மட்டுமில்லாமல் உணவு இல்லாமல் வரும் மக்களுக்கு வெண்பொங்கல், வெஜிடபிள் பிரியாணி என அனைவருக்கும் உணவு வழங்கும் செயலிலும் ஈடுபட்டனர். இதில் திமுக, அதிமுக மற்றும் பெரியார் இயக்கங்களை சேர்ந்த அமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் வாங்கி பருகினர். இந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் மக்கள் பயன்பெறும் வகையில் புதுவிதமான முயற்சியை மேற்கொண்டது அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக 500க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் இரண்டு அன்னதானம் உள்ளிட்டவர்களை வழங்கியதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சேலம் மரவனேரி பகுதியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று அம்பேத்கர் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குறிப்பாக விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ஆயிரம் கிலோவிற்கு மேலாக தர்பூசணியை வாங்கி மக்களுக்கு இலவசமாக வழங்கியதாகவும், இது மட்டுமில்லாமல் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வரும் அனைத்து கட்சியினருக்கும் பயன்பெறும் வகையில் அன்னதானம் மற்றும் உடலுக்கு குளிர்ச்சியான பானம் மற்றும் பல வகைகளில் வழங்கி வித்தியாசமான முறையில் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள் தெரிவித்தனர். எங்களுடைய கொண்டாட்டமே அனைத்து கட்சிகளையும் சேர்ந்த மக்களும் பயன்பெற வேண்டும் என்பதுதான் அதற்காகவே இந்த முயற்சியை இரண்டாவது முறையாக மேற்கொண்டதாக தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola