நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், அவர்கள் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள் என்றால், அவர்களுடைய பேச்சை நாம் எதற்கு கேட்க வேண்டும். தொகுதி சீரமைப்பு குறித்து 2003லியே எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். பேசியும் வருகிறேன். மக்கள் தொகையில் அடிப்படையில் பிரிக்கும்போது, வடமாநிலங்களுக்கு அதிகமாகவும் நமக்கு குறைந்தும் விடும். இருக்கிற நடைமுறையில் என்ன பிரச்சினை. சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிப்பதை எப்படி ஏற்க முடியும். தேவையில்லாத போராட்டங்களை நமக்கு உள்ளே திணிக்கிறார்கள். இதை எல்லோரும் சேர்ந்து எதிர்த்து கடுமையாக போராடி நம்ம தடுப்போம் என்றார்.

முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டியுள்ளது குறித்து கேட்டதற்கு பதிலளித்த சீமான், மாநில உரிமை என்று வரும் போது எல்லோரும் சேர்ந்து நின்னுதான் ஆகனும். அது சரிதான். எல்லா ஆற்றலையும் சேர்ந்து ஒருமித்த குரலாக எதிர்ப்பை தெரிவித்து, இது அவசியமில்லை என்று நாம் தடுக்க வேண்டும். இது கொண்டு வருகிறவர்களை தனித்து விட்டு, மற்ற அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் அவர்கள் அதை கைவிடுவார்கள். அது சரியாக வராது என்றார்.
காளியம்மாள் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர உள்ளது குறித்து கேட்டதற்கு பதிலளித்த சீமான், அது தனக்கு முன்கூட்டியே தெரியும். தங்கைக்கு வாழ்த்துக்கள் என்றார்.