குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து முனையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும் 150 பேருந்துகளையும் குத்தம்பாக்கத்திற்கு மாற்ற மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மின்சார பேருந்துகள் பாரமாரிப்பு:

புறநகர் பேருந்துகள் மற்றும் நீண்ட தூர பயணிகளுக்கான இணைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இது அமைந்துள்ளது. இதன் விளைவாக, பூந்தமல்லி பேருந்து நிலையம் 120 மின்சார பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் இயக்கத்திற்கான பிரத்யேக மையமாக மாற்றப்படும். புதிய முனையம் பூந்தமல்லியில் இருந்து 8.5 கி.மீ தொலைவிலும், CMBT இலிருந்து 23.5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: புது பொலிவுக்கு வருகிறது புதுவை; ரூ.1000 கோடியில் புதுச்சேரி - கடலூர் சாலை விரிவாக்கம்

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்:

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருமழிசை அருகே அமைந்துள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பேருந்து நிலையம், சிஎம்டிஏவால்  ரூ.427 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இது மார்ச் மாதத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலூர், கிருஷ்ணகிரி, வாலாஜா, ஓசூர், திருப்பத்தூர் மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும் TNSTC மற்றும் SETC பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும். புதிய முனையம் நகரம் மற்றும் அதன் முக்கிய சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

170 பேருந்துகள் இயக்கப்படும்:

குத்தம்பாக்கம் பேருந்து  முனையத்திலிருந்து 170 மாநகர பேருந்துகள் இயக்கப்படும். தற்போது, ​​பூந்தமல்லி பணிமனை, ஆவடி, பிராட்வே, தாம்பரம், ரெட்ஹில்ஸ், CMBT மற்றும் பிற பகுதிகள் உட்பட நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சுமார் 1,000 வருகைகள் மற்றும் 1,000 புறப்பாடுகளை நிர்வகிக்கிறது. "இடமாற்றம் செய்யப்பட்ட 150 பேருந்துகளுக்கு கூடுதலாக, CMBT மற்றும் குத்தம்பாக்கம் இடையேயான  10 புதிய பேருந்துகளும், கிளாம்பாக்கத்திலிருந்து குத்தம்பாக்கம் மற்றும் பிற பகுதிகளுக்கு மேலும் 10 பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்படும்" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

இதையும் படிங்க: Hyperloop Train: அதிவேக ஹைப்பர்லூப் ரயில்! டெஸ்ட் ட்ராக் தயார் - சோதனை ஓட்டம் எப்போது?

திருநின்றவூர் ரயில் நிலையத்துக்கு இணைப்பு:

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், திருநின்றவூர் ரயில் நிலையத்திற்கான இணைப்பை மேம்படுத்த பேருந்து வழித்தடங்களும் மாற்றி அமைக்கப்படும்.. பூந்தமல்லி பணிமனையில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை மாநகர் போக்குவரத்து பிரபுசங்கர் ஆய்வு செய்தார், இதில் மின் பேருந்துகளுக்கான சார்ஜிங் வசதிகள் நிறுவுதல் மற்றும் பிற பயணிகள் வசதிகள் அடங்கும்.

நீட்டிக்கப்படும் பேருந்து சேவைகள்:

மேலும், தாம்பரத்திலிருந்து குன்றத்தூர் வழியாக பூந்தமல்லிக்கு தற்போது இயக்கப்படும் வழித்தடம் 66 இல் உள்ள பேருந்துகள் குத்தம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். குத்தம்பாக்கத்திலிருந்து கிளாம்பாக்கத்திற்கு  ஒரு புதிய சேவை அறிமுகப்படுத்தப்படும், இது இரண்டு முனையங்களையும் வெளிப்புற சுற்றுச் சாலை வழியாக இணைக்கும்.

இதேபோல், 202/206 (KCBT - ஆவடி) வழித்தடங்களில் உள்ள பேருந்துகள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வெளிப்புற வட்டச் சாலை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். "சென்னை பைபாஸ் வழியாக CMBT முதல் KCBT வரை வழித்தடத்தில் சேவைகளின் எண்ணிக்கை ஏற்கனவே 10 லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேவையைப் பொறுத்து, குத்தம்பாக்கத்திற்கு பேருந்துகளின் எண்ணிக்கையும் விரிவுபடுத்தப்படும்" என்று அதிகாரிகள்  தெரிவித்தனர்.

சேவைகளில் மாற்றம்:

இந்த முனையத்திலிருந்து 170 மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படும்.தற்போது தாம்பரத்தில் இருந்து குன்றத்தூர் வழியாக பூந்தமல்லிக்கு இயக்கப்படும் வழித்தட எண் 66ல் உள்ள பேருந்துகள் குத்தம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும். கோயம்பேடு மற்றும் குத்தம்பாக்கம் இடையேயான வழித்தடத்தில் 10 புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து குத்தம்பாக்கத்திற்கு 10 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.