கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம்   4 லட்சத்து 20 ஆயிரம் பொதுமக்கள்  இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். இவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயச்சந்திர பானு ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று 2வது அலையில் நாள் ஒன்றுக்கு 800 நபர்கள் வீதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.  தற்போது, மாவட்ட நிர்வாக நடவடிக்கைகள் மூலம் படிப்படியாக குறைந்து நாளொன்றுக்கு பத்துக்கும் கீழாக தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இதற்கு காரணம் பொதுமக்கள் அதிக அளவு தடுப்பூசி செலுத்தி கொண்டது தான் என தெரிவித்தார்.  


ஜெய்பீம் திரைப்படத்தை பார்க்க நேரமில்லை - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டி



Omicron | ”எனக்கு அதிர்ச்சியா இருந்தது...” ஓமிக்ரான் வகை கொரோனாவை கண்டுபிடித்த மருத்துவர் அதிர்ச்சி தகவல்


மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 15 லட்சத்து 2 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியானவர்கள் என்றும்,  இதில் மாவட்ட முழுவதும் பொதுமக்கள் எளிதாக தடுப்பூசி செலுத்திக்கொள்வற்காக அனைத்து கிராம பகுதிகளிலும் மற்றும் மெகா தடுப்பூசி திட்டதின் மூலமாக இது வரையில் 10 லட்சத்து 86 ஆயிரத்து 500 பொதுமக்களுக்கு  தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் 4 லட்சத்து 20 ஆயிரம் நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று பற்றி அறியாமல்  இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என தெரிவித்தார்.


ஒமிக்ரான் அச்சுறுத்தல் - திருச்சி வரும் சிங்கப்பூர் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்



தற்போது ஓமைக்ரான் எனும் புதிய வகை வைரஸ் பரவி வரும் இந்தசூழ்நிலையில் மாவட்டத்தில் மீதம் உள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்றும், தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்கள் மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் மாவட்டத்தில் உள்ள பொது இடங்களான நியாய விலை கடை, வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், கடைவீதிகள், துணிக்கடைகள், வங்கிகள் உள்ளிட்ட 18 இடங்களில் செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து இந்த விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.


ஒமிக்ரான் அச்சுறுத்தல் - திருச்சி வரும் சிங்கப்பூர் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்