பூக்களால் செய்யப்பட்ட தேசிய மூவர்ணத்தை காலடியில் மிதித்து அவமதித்ததற்காக பாஜக தலைவர்களை உத்தரகாண்ட் பிரதேச காங்கிரஸ் கமிட்டி கடுமையாக சாடியுள்ளது.
மூவர்ணக்கொடி அவமதிப்பு
பிப்ரவரி 24 அன்று மாநில பாஜக தலைமையகத்தில் பூத் அதிகாரமளித்தல் பிரச்சாரத்தின் பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிலரங்கில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உத்தரகாண்ட் காங்கிரஸ் கமிட்டி தலைவராக கரண் மஹாரா பதவி வகித்து வருகிறார். பாஜக-வின் பயிலரங்கின் போது பாஜக தலைவர்கள் மூவர்ணத்தை அவமதித்ததற்குக் கடுமையாக பதிலளித்த மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கரண் மஹாரா, “பாஜகத் தலைவர்கள் ஆட்சியில் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள், இப்போது அவர்கள் நாட்டின் பெருமையாகக் கருதப்படும் மூவர்ணத்தைக் கூட அவமதிப்பதைத் தவிர்க்கவில்லை. இதுவே அவர்கள் பெருமை", என்று குறிப்பிட்டார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
பின்னர், அவர் பாஜக மாநிலத் தலைவர் மகேந்திர பட், ராஜ்யசபா எம்பி கல்பனா சைனி மற்றும் மாநில பொறுப்பாளர் துஷ்யந்த் குமார் ஆகியோரை டேக் செய்து, "இந்த செயலுக்காக நாட்டு மக்களிடமும் மாநில மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இதுதான் வெளிப்படை மனநிலை
இச்சம்பவம் தொடர்பாக பாஜக மீது கடும் கண்டனம் தெரிவித்த மஹாரா, “ஒருபுறம் படத்தில் காவி உடை அணிந்து நாடு முழுவதும் நல்லிணக்கச் சூழலை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மறுபுறம். பூக்களால் ஆன தேசியக் கொடியை மிதிப்பதன் மூலம் பாஜக தலைவர்கள் தங்கள் அற்ப மனநிலையை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள்", என்ற அவர் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி.க்களும், மூத்த கட்சி உறுப்பினர்களும் சேர்ந்துதான் மூவர்ணக் கொடியை மிதித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
பாஜகவிடம் அதனை எதிர்பார்ப்பது வீண்
அவரை தொடர்ந்து அந்த பதிவிலேயே, மஹாராவின் சமூக வலைதள அட்வைஸர் அமர்ஜீத் சிங், "மூவர்ணக் கொடிக்கு பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் மரியாதை எதிர்பார்ப்பது வீண். மாறாக, இந்தச் செய்தியை மறைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. 52 ஆண்டுகளாக மூவர்ணக் கொடியை ஏற்றாத தாய் அமைப்பை கொண்டவர்கள் தான் இன்று மூவர்ணக் கொடியை போற்றி 'மூவர்ண யாத்திரையை' அரசியல் ஆதாயங்களுக்காக நடத்துகிறார்கள்', என்று எழுதினார்.