கடந்த மார்ச் மாதத்தில் பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக போலீஸ் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளும் தீவிர விசாரணையில் இறங்கினர்.


சர்ச்சை கருத்து:


 


அப்போது, பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர்  ஷோபா கரண்ட்லேஜே சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார் ”தமிழ்நாட்டில் இருந்து இங்கு வருகிறார்கள். அவர்கள் இங்கு குண்டுகள் தயாரிக்க பயிற்சி அளிக்கின்றனர்” என்று பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார். இந்த குற்றச்சாட்டானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.






புகார்: 


இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் சோபாவிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்தார்., “பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தி உள்ள மத்திய பா.ஜ.க. இணை அமைச்சர் சோபா கரந்த்லஜே பொறுப்பற்ற பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.


இதையடுத்து திமுக சார்பில் அளித்த புகாரையடுத்து சோபா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


மன்னிப்பு கோரிய இணை அமைச்சர்:


மேலும், தமிழ்நாட்டு மக்கள் குறித்து தவறுதலாக பேசியமைக்கு மன்னிப்பு கேட்பாதகவும் சோபா தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழக மக்களைப் பற்றி நான் கூறிய கருத்து தமிழக மக்களின் உணர்வுகளையும், உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்துடன் பேசவில்லை. எனது கருத்துகள் சிலரின் உணர்வுகளை புண்படுத்தியிருப்பதை புரிந்து கொண்டு, நான் ஏற்கனவே எனது முந்தைய கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொண்டேன். மேலும் சமூக ஊடக தளங்கள் மூலம் எனது மன்னிப்புகளை தெரிவித்தேன், என தெரிவித்தார்.


வழக்கு ரத்து:


மேலும், கரண்ட்லாஜே தனது முந்தைய கருத்துக்களை ஏற்கனவே திரும்பப் பெற்றதாகவும், "சமூக ஊடக தளங்கள் மூலம் ஆழ்ந்த மன்னிப்பு" கோருவதாகவும் கூறினார்


இதையடுத்து இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டு மக்களிடம் கேட்டதையடுத்து, வழக்கை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.