விழுப்புரம் : செஞ்சியில் பட்டா கேட்ட பழங்குடியின மக்களுக்கு சொந்த இடத்தை இலவசமாக வழங்கிய அமைச்சர் செஞ்சி மஸ்தான். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மலைவாழ் மக்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களுடைய சொந்த இடத்தை எழுதிக்கொடுத்தார். செஞ்சி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் பழங்குடியின மக்கள் (இருளர் பழங்குடியினர்) வசித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு
இவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 26.2.21அன்று தீவனூரில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இடம் அப்பகுதி மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து கோரிக்கை மனு கொடுத்த பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் கொடுப்பதற்கு போதிய வகையில் இடம் இல்லாததால்..
செஞ்சி பேரூராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் சர்வே எண். 51/1.எ. 66 சென்ட் புஞ்செய் நிலத்தை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தன்னுடைய பெயரில் இருந்த இடத்தை இவர் தனது மனைவி சைதானீ பீ மற்றும் மூத்த மகளுடன் செஞ்சி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று தமிழக ஆளுநர் பெயருக்கு தன்னுடைய இடத்தினை இலவச மாக எழுதி கொடுத்தார். நிகழ்ச்சியின் போது சப் ரிஜிஸ்டர் ஆறுமுகம், செஞ்சி தாசில்தார் பழனி,ஒன்றிய சேர்மன் விஜயகுமார்,மற்றும் பலர் உடன் இருந்தனர். பழங்குடியின மக்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தின் மதிப்பு சுமார் 60 லட்சம் ஆகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்