சிவகங்கை குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான ஏலம் நடைபெற்றது. இந்நிலையில் ஏலத்தில் கலந்து கொள்ளவந்த தி.மு.கவினரிடையே மோதல் ஏற்பட்டு  நிர்வாகி ஒருவருக்கு மண்டை உடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சிவகங்கை தி.மு.கவினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.



சிவகங்கை நகராட்சி அலுவலகம் அருகேவுள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளுக்கான டெண்டர் நடைபெற்றது. இதில் பங்கேற்க தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர்  சேங்கை மாறன் மற்றும் தி.மு.க ஒப்பந்ததாரர்களும்  பங்கேற்றனர்.

 

இங்கே சற்று கவனிக்கவும் -  *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

 

 இதில் திடீரென தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் அணியினருக்கும்  தி.மு.க நிர்வாகி கோவானூர் சோமன் என்பவரது அணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



மேலும் சிவகங்கை மாவட்ட அரசியல் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -"போனால் வராது பொழுதுபோனா கிடைக்காது" - ஒன்றியத்தலைவர் பதவியை தக்கவைத்த கவுன்சிலர்..!

 

இந்நிலையில் இருதரப்புக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டு அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியைக் கொண்டு தாக்கி கொண்டதில் தி.மு.க நிர்வாகி சோமன் என்பவருக்கு தலையில்  பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து. சோமனின் ஆதரவாளர்கள் எதிர் தரப்புடைய காரை கல்லால் அடித்து தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தி.மு.கவினர் மோதல்  சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.


 

சிவகங்கை ஒன்றிய வார்டுகளில் அதிமுக கவுன்சிலர்கள் தி.மு.க பக்கம் குதித்துவிடலாம் என ஆசையில் இருந்தநிலையில் சமீபத்தில் அதிமுக ஒன்றிய தலைவரே தி.மு.க பக்கம் சாய்ந்தார். இதனால், சிவகங்கை  ஒன்றியம் தி.மு.க கைவசம் போயுள்ளதாக தி.மு.க உடன் பிறப்புகள் மார்தட்டினர். அமைச்சரும், தி.மு.க மாவட்ட செயலாளருமான பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க வலுவாக இருக்க வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் பேசிவருகிறார். இந்நிலையில் சிவகங்கை  தி.மு.க வில் மண்டை உடைப்பு சம்பவம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.