தமிழகத்தில் தி.மு.க., அரசு பொறுப்பேற்றதற்கு பின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வில்லை எனவும். சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்தும் அ.தி.மு.க.,வினர் தமிழகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட இடத்தில் நேற்று முதல் கட்டமாக கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினர்.


 





 இன்று தேனி பங்களா மேடு பகுதியில் எதிர்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனால் திரளான தொண்டர்கள் மதுரை திருமங்கலத்தில் உள்ள குண்ணத்தூர் அம்மா கோயிலில் இருந்து  பலரும் ஒன்றிணைந்து கிளம்பினர்.



இந்நிலையில், இரவு தங்கிருந்த தொண்டர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ய ஆர்.பி.உதயகுமார் தனது மூத்த மகள் பிரிய தர்சினி மற்றும் அவரது மனைவியுடன் இணைந்து பரோட்டா தயார் செய்தார். இதன் வீடியோ காட்சி தற்போது வெளியாகி அ.தி.மு.க., தொண்டர்களால் பரப்பப்பட்டு வருகிறது.




 

இது குறித்து அ.தி.மு.க., தொண்டர்கள் சிலர், “குண்ணத்தூர் அம்மா கோயிலில் தொடர்ந்து மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. டீ, காபி முதற்கொண்டு பசியாறு வகையில் வழங்கப்படுகிறது. இதனை ஆர்.பி.உதயகுமார் கவனித்துக் கொள்கிறார். இந்நிலையில் இன்று தேனி மாவட்டத்தில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மதுரையில் இருந்து கிளம்பும் தொண்டர்கள் அம்மா கோயிலில் தங்கியிருந்து கிளம்பினோம். அதற்காக தங்கியிருந்த தொண்டர்களுக்கு இரவு உணவை ஆர்.பி.உதயகுமார் குடும்பத்தினருடன் இணைந்து கவனித்துக் கொண்டார். அந்த வீடியோ தான் தற்போது இணைத்தில் பரவுகிறது ” என்றார்.

 

எதிர்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பரோட்டோ தயார் செய்யும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண