கடலூர்: முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுபவர்களுக்கு தான் கட்சியில் முக்கிய பொறுப்பு என கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியுள்ளார். கடலூர் மாவட்டம் வடலூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வேளாண்துறை அமைச்சரும் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆட்சிக்கு வந்தபின் திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றது. ஆனால் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இதுவரை கொடுக்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Suicide : கள்ள உறவில் தகராறு.. கட்டுமானப் பணியாளர் காதலி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
இதனால் மக்கள் இடத்திலேயே பெரும் பேச்சாக இருந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம் விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் தொடங்கப்படும். ஏழை, எளிய மக்களுக்கான முதல்வராக செயல்பட்டவர் கலைஞர் கருணாநிதி. அவருடைய பிறந்தநாள் வருகின்ற 3-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதனை நாமும் கொண்டாட வேண்டும்.
Ponmudi Latest Speech : பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டதில் என்ன தவறு?..கொதித்தெழுந்த அமைச்சர் பொன்முடி
புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியத்திலும், நகரப் பகுதியிலும், பேரூராட்சி ஆகிய வார்டுகளில் வீதி வீதியாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை திறந்து வைத்து மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும் என பேசினார். கருணாநிதியின் பிறந்தநாளை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடவில்லை என்றால் அடுத்த மாதம் ஒன்றியப் பகுதி உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாடுகிறார்களோ அதைப் பொருத்தே பதவிகள், பொறுப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதனால், அவருடைய பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்