தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது,


பா.ஜ.க. மத்திய குழு:


“தமிழ்நாட்டிற்கு 4 பேர் அடங்கிய பாஜக மத்திய குழு வரும் 27-ஆம் தேதி வருகிறார்கள். சென்னையில் ஒரு சில நபர்களையும் சந்திக்க உள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சியில் நோட்டீஸ் இல்லாமல் கைது செய்து வருகிறார்கள். நீதித்துறை மீது பிரஷர் செய்கிறார்கள்.


திமுக ஆட்சி அதிகாரம் மீது உள்ள குற்றச்சாட்டுகளை அடிப்படை ஆதாரத்தோடு நிரூபிக்க உள்ளோம். அதற்கான குழு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு புகார் அடிப்படையிலும் அதற்கேற்றவாறு எங்களுடைய வாதத்தையும் சமர்ப்பிக்க உள்ளோம்.


கௌதமி புகார் தெரிவித்த நபருடன் 25 ஆண்டுகள் பழக்கம் உள்ளவர்..அவருடைய புகார் ஆமை வேகத்தில் தான் சென்று கொண்டு இருக்கிறது. அதேபோல் அந்த நபர் பா.ஜ.க.வை சார்ந்தவரே இல்லை. காவல் துறை விரைந்து செயல்பட வேண்டும். கௌதமி கட்சியில் இல்லை என்றாலும் அவருக்கு துணையாக நான் இருப்பேன்.


தேசிய கொடிக்கு அனுமதி மறுப்பு:


முதற்கட்டமாக 27, 28 ஆகிய 2 நாட்கள் இந்த குழு ஆய்வு செய்ய உள்ளனர். கொடி கம்ப புகார் வெறும் கொடிகம்ப விவகாரம் மட்டும் அல்ல. இவர்கள் ஒரு பாட்டர்ன் மூலம் செய்கிறார்கள் காங்கிரஸ் புகார் தெரிவிப்பதும் அதற்கு உடனே நடவடிக்கை எடுப்பதும் என்பதுமாக தி.மு.க. காவல் துறை இருக்கிறது.


பாகிஸ்தான் போட்டியில் இந்தியா கொடி அனுமதி இல்லை என்பது ஏற்று கொள்ள முடியாது. பொன்முடி மகன் அதன் தலைவராக உள்ளார். அவர்கள் தேவைக்காக தேசிய கொடியை குப்பையில் போட சொல்லும் அளவுக்கு அவர்கள் செயல்படுகிறார்கள். இதற்கு ஐ.சி.சி. கமிட்டியும் காவல் துறையினரும் பதில் சொல்ல வேண்டும்.


தேசிய கொடியை அனுமதிக்காதது தவறு. அதிலும் குப்பை தொட்டியில் போடவைப்பது அதைவிட கொடுமை. கௌதமி விவகாரத்தில் அதிக அக்கறை கொண்டதும் நாங்கள்தான்.  அவர்களுக்கு கண்டிப்பாக நியாம் கிடைக்க வேண்டும். அவர்கள் தற்போது மன உளைச்சல் உள்ளார். ஆனால் இதற்கும், பாஜக கட்சிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது”


இவ்வாறு அவர் கூறினார்.


கொடிக்கம்ப விவகாரம்:


சென்னையில் அண்ணாமலை வீட்டின் முன்பு நடப்பட்டிருந்த பா.ஜ.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அமர்பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.


மேலும், இன்னும் சில நாட்களில் ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.


மேலும் படிக்க: TN Governor RN Ravi: "காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் சாதி தலைவராக மாற்றியிருப்பார்கள்" - ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு


மேலும் படிக்க: மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை - மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு