சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட உள்ள 2 வேட்பாளர்களை அதிமுக அறிவித்து இருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், அதிமுகவில் தொடர்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இபிஎஸ், ஒபிஎஸ் தரப்புக்கு இடையே இழுபறி நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் பெற்றுத்தர இரு தலைவர்களும் போட்டியிட்டதால் வேட்பாளர்கள் தேர்வு தாமதமானதாக பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அதிமுக அறிவித்து இருக்கிறது.


இதில் கடந்த  அதிமுக ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த சி.வி.சண்முகம் 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர். தற்போது எந்த அரசு பதவிகளிலும் இவர் இல்லாத நிலையில், வைத்திலிங்கத்துக்கு முன்பு வழங்கப்பட்டதை போல் தற்போது சி.வி.சண்முகத்துக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது அதிமுக.




ஜெயலலிதா இருந்த போது பல்வேறு புகார்களின் அடிப்படையில் சிவி சண்முகத்தின் அமைச்சர் பதவி, மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகள் பறிக்கப்பட்டன. இதையடுத்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக தற்போது வலம் வருகிறார். சட்டத்துறை என்ற முக்கிய இலாகாவை கையில் வைத்திருந்த சிவி சண்முகம் கடந்த 2011 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் 12,097 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தொடர்ந்து 2016இல் சட்டசபைத் தேர்தலில் சட்டத் துறை அமைச்சராக இருந்தார்.


நடைபெற்ற விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் களமிறக்கப்பட்டார். திமுக தரப்பில் அதிமுகவில் விழுப்புரம் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்துவந்த மருத்துவர் ஆர்.லட்சுமணன் போட்டியிட்டார். அதேபோல், அமமுக வேட்பாளராக சி.வி.சண்முகத்தின் நெருங்கிய விசுவாசி மற்றும் தனிப்பட்ட உதவியாளராக இருந்த ஆர்.பாலசுந்தர் உள்பட 25 போ் போட்டியிட்டனர்.திமுக சார்பில் போட்டியிட்ட லட்சுமணன் 1,01,755 வாக்குகளும், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் 86,878 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து, 14,877 வாக்குகள் வித்தியாசத்தில் சிவி சண்முகம் தோல்வி அடைந்தார்.


மேலும் அதிமுக தலைவர்களின் பேசப்படும் தலைவராக கவனிக்கப்பட்டு வந்தவர் தான் சிவி சண்முகம். மேலும் முக்கிய பொறுப்புகளிலும் சிவி சண்முகம் செயல்பட்டு வருகிறார். எடப்பாடியின் தீவிர விசுவாசியான இவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமீப காலங்களில் சிவி சண்முகம் அரசியல் வியூகம் முழுவதும் மாறியுள்ளது. இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து பயணம் செய்து வருகிறார். மேலும் மேடை பேச்சுக்களிலிலும் அதிரவிட்டு வருகிறார்.


 


தர்மயுத்தத்தில் தாங்கிய தர்மர்... காத்திருந்தவருக்கு கர்ணனாக மாறிய ஓபிஎஸ்!