பிடிஆர் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் ஆனது முதல் அவரது செயல்பாடுகள்- மத்திய அரசை குறிவைத்து இருப்பதாக பரவலான பேச்சு உள்ளது. அதுவும் குறிப்பாக ஜிஎஸ்டி கூட்டத்தில் சென்று மத்திய நிதி அமைச்சரிடம் விவாதித்தது, 45 ஆவது ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளாதது, ட்விட்டரில் பாஜகவினரை வார்த்தை ஜாலங்களால் பேசியது என தொடர்ச்சியாக சர்ச்சைகள் கிளம்பி கொண்டே இருந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமனுடன் அவருக்கு அடிக்கடி உரசல்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை விவகாரம், பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருபவர் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அவர் சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.



சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்காக 65 கோடி ரூபாய் செலவில் 243.48 சதுர மீட்டர் பரப்பளவில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சிகரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த குடியிருப்பு வளாகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (செப்டம்பர் 30) மாலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வருவாய் செயலர் தருண் பஜாஜ், மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் மொஹபத்ரா, வருமான வரித்துறை தலைமை ஆணையர் டி.சி.பட்வாரி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதற்காக சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பூங்கொடுத்து வரவேற்றார். மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.



தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பூங்கொத்து வழங்கி வரவேற்றார் என்று நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் இட்டிருந்த பதிவிற்கு ரிப்ளை செய்யும் விதமாக, "ஒன்றிய நிதியமைச்சர் தமிழகம் வந்திருக்கிறார் என்ற செய்தியை அறிந்த உடன் அவர்களை சந்திக்க அப்பாய்ன்மெண்ட் கேட்டேன், உடனடியாக தந்தது மட்டுமின்றி, பதவியேற்றதற்கு வாழ்த்துகளும் தெரிவித்தார். வாழ்த்துக்களுக்கும், ஜிஎஸ்டி கவுன்சிலின் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஆதரவு நல்குவதற்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் கலந்து கொள்ளவில்லை என்பது தொடர்பாகப் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தனர். இதுதொடர்பாக காட்டமான கருத்துக்களை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். எவ்வளவு அரசியல் முரண்பாடுகள் இருப்பினும் மரியாதைப்பூர்வமாக அவர் சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.


இன்றைய முக்கிய சிறப்புச் செய்திகள் இதோ...


Survivor Tamil: வனமே வனத்திற்கு வந்தது போல்... சர்வைவரில் வந்திறங்கிய வனேசா குரூஸ் யார்?


TN Local Body Election: விழுப்புரம்... உயர்வது யார் கரம்...? பொன்முடி Vs சிவி சண்முகம்... உள்ளாட்சி கிங் யார்?


‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!


அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு... போராட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள்!