தமிழகத்தில் புதியதாக பிறப்பிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், பெரும்பாலான இடங்களில் ஆட்சியில் உள்ள திமுக வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்தது. தற்போது, இந்த உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற தேர்தல் நடைபெற இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அரசாணையை ஜனவரி 3 வது வாரத்தில் வெளியிடவும் உள்ளதாக தெரிகிறது.
21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தவும், தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு மறுவரையரை முடிந்ததால் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து தற்போது நகர்ப்புற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு 4 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திமுக சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம். <a href="https://bit.ly/2TMX27X">pic.twitter.com/GwkGKJszDF</a></p>— Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://tamil.abplive.com/entertainment/actor-jacqueline-fernandez-stopped-at-mumbai-airport-from-leaving-india-over-200-crore-extort-28869">December 6, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்