DMDK Contest Alone: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் - விஜயகாந்த் அறிவிப்பு
TN Urban Local Body Election 2021: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை
Just In




தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை அந்தந்த, மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு, தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், தேமுதிகவின் உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.
முன்னதாக நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக தனித்துப்போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்