அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போன்றவர்கள் என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விமானநிலையத்தில் பேட்டி அளித்த சசிகலா அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போன்றவர்கள் எனவும் குடும்பத்தின் பிள்ளைகளை சந்திக்க செல்கிறேன் எனவும் நிச்சயமாக தொண்டர்கள் என்னை சந்திப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:எண்ட்ரி கொடுக்கும் சசிகலா? சித்து விளையாட்டு விளையாடும் ஓபிஎஸ்.. காரணத்தை அடுக்கும் விமர்சகர்கள்!
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலால் திமுக குஷியில் உள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சியான அதிமுக பலமாக அடிவாங்கியுள்ளது. மாநகராட்சிகளில் திமுக 43.59 சதவிகிதம் வாக்குகள் பெற்றது. அதிமுக 24 சதவிகித வாக்குகளை பெற்றது. பேரூராட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக 41.91%, அதிமுக 25.56% வாக்குகளை பெற்றது. இந்த வாக்கு சதவீதம் அதிமுகவின் பலவீனத்தை காட்டியது. பல முக்கிய அதிமுக தலைவர்களின் இடங்களிலேயே அதிமுக அடிவாங்கியது.
இது அக்கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அதிமுகவில் மீண்டும் சசிகலா, தினகரன் சேர்க்க தேனி மாவட்ட அதிமுகவினர் வரும் 5ம் தேதி இது குறித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தேனியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது. அதிமுகவில் மட்டுமல்ல தமிழக அரசியலையே இந்த நிகழ்வு மிகவும் பரபரப்பு உண்டாக்கியது.
நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து பரபரப்பை கிளப்பினார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி. செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சசிகலாவின் தலைமையை அதிமுக ஏற்க வேண்டும். டிடிவி தினகரன் வழி நடத்த வேண்டும்” என தெரிவித்தார். சேலத்தில், எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சேலத்தின் அதிமுக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாக தெரிகிறது. சசிகலா இணைப்பு தொடர்பாக முக்கிய ஆலோசனை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தச் சூழலில் சசிகலாவின் செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கெனவே அதிமுகவில் சில நாட்களாக சலசலப்பு ஏற்பட்டுத்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்