டெக்னிக்கை கையில் எடுத்த பிரதமர் மோடி! நாளை டெல்லி தேர்தல்: கும்பமேளாவில் நீராடல்
PM Modi Maha Kumbh Mela - Delhi Election: நாளை , டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நீராடுகிறார் பிரதமர் மோடி. இது எதை உணர்த்துகிறது?

பிரதமர் மோடி, நாளை உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராட உள்ளார். இந்நிலையில், நாளை டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலும் நடைபெறவுள்ளதால், பிரதமரின் ஆன்மீக நிகழ்ச்சி விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளது. இதுபோன்று , பிரதமர் மோடி செய்வது , முதல்முறையா என்றால், இல்லை என்ற பதில்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்:
டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இங்கு, தொடர்ந்து 2 முறை டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை, மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. காங்கிரசும் களத்தில் இருக்கிறது என்று மட்டுமே சொல்ல வேண்டியிருக்கிறது.
டெல்லி, இந்தியாவின் தலைநகரமாக இருப்பதால, மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக கூட்டணி அரசு , டெல்லியில் மத்திய அரசின் தலைமை அலுவலகம் இருந்தாலும் , டெல்லி மாநில அரசு வேறொரு கட்சியிடம் இருப்பதால், தர்ம சங்கடத்தில் இருக்கிறது. அதுவும் , மிகப்பெரிய சக்தியாகவும், சுனாமி அலை என்ற பார்க்கப்பட்ட மோடி தலைமையில், 3முறை பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் இரண்டு முறையும் மோடியின் பாஜகவால், டெல்லியின் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.
அடுத்த மக்களைத் தேர்தலில், மீண்டும் மோடி பிரதமர் வேட்பாளராக இருப்பாரா , அல்லது வயது உள்ளிட்ட காரணங்களால், அதானி பிரதமர் வேட்பாளராக பாஜக நிறுத்தப்படவில்லை என்ற கருத்து போல , வேறு ஒருவர் நிறுத்தப்படுவாரா என்ற சந்தேகங்களும் உள்ளன.
Also Read: மோடிகிட்ட போய், ராஜினாமா செய்றேன்! அயோத்தி பட்டியலின பெண் மரணத்தில் கதறி அழுத எம்.பி
முதலமைச்சர்களை களமிறக்கிய பாஜக:
இதனால், மோடி ஆட்சியில் இருக்கும் போதே டெல்லியை கைப்பற்ற வேண்டும் என்று, கவுரவ குறைச்சலாக பார்ப்பதாகவும் கூறப்படுகிரது. மோடி அலையால் இதுவரை டெல்லி சட்டப்பேரவை அசைக்க முடியவில்லை. இந்த தேர்தலில் டெல்லியை பாஜக, எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்றும் முனைப்பில் மோடி இருக்கிறார். அதற்கு தீவிரமாக மோடி முயற்சி செய்து வருவதையும் பார்க்க முடிகிறது.
இதனால், இந்த முறை, பாஜக முதலமைச்சர்களான மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ், உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் , கூட்டணியில் இருக்கும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவையும் டெல்லியில் களத்தில் இறக்கி தீவிரமாக பாஜக பரப்புரை மேற்கொண்டதை பார்க்க முடிந்தது.
டெல்லி தேர்தல்-நீராடலில் மோடி
மேலும், நாளை டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , கும்பமேளாவில் பிரதமர் மோடி பங்கேற்று, புனித நீராட உள்ளது, பல்வேறு விமர்சனங்களுக்கு இடமளித்துள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் இருக்கும்போது, பாஜக தலைவர் இதுபோன்று நிகழ்ச்சியில் பங்கேற்பது, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், கருத்துக்கள் எழுகின்றன.
Also Read:திருப்பரங்குன்றம்: இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
மறைமுக பரப்புரை:
இது பிரதமருக்கு முதல்முறையா என்றால், இல்லை என்ற பதில்தான். ஏனென்றால், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், இறுதி கட்ட வாக்குப்பதிவின்போது, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டதும் பெரும் விமர்சனத்திற்கு இடமளித்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி, வாக்களிப்பு நாளின்போது இதுபோன்ற மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது, இது ஒரு மறைமுக பரப்புரைதான் என்றும் விமர்சனங்கள் எழுவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி நாளை கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், நாளை காலை பிரயாக்ராஜ் விமான தளத்திற்கு விமானப்படை விமானம் மூலம் செல்லவுள்ளார். இதையடுத்து பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் சுமார் 11 மணியளவில் நீராடி உள்ளார்.
இதையடுத்து, சுமார் 11.45 மணி அளவில் அங்கிருந்து கிளம்பி விமான தளத்திற்கு செல்வார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.