தண்ணீர் கொடுக்கிறோம்; குளியல் சவர் அமைக்கின்றனர்.! ராஜீவ், ராகுல், கெஜ்ரிவால்..வரிசையாக தாக்கிய மோடி.!
PM Modi: டெல்லியில் இருந்து ஒரு ரூபாய் அனுப்பினால், மக்களுக்கு 15 பைசா மட்டுமே கிடைக்கும் என்று ஒரு பிரதமரே ஒப்புக்கொண்டார் என ராஜீவ் காந்தியை மறைமுகமாக தாக்கிய பிரதமர் மோடி.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தொடங்கி ராகுல் காந்தி வரை, காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசினார். இதையடுத்து ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் குற்றம் சாட்டினார்.
கெஜ்ரிவால் மீது தாக்குதல்:
டெல்லி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக விமர்சித்தார். அவர் தெரிவித்ததாவது, “ பாஜக கூட்டணி அரசாங்கம் அனைவருக்கும் வீட்டு தண்ணீர் இணைப்பு வழங்குவதில் கவனம் செலுத்துகிறது, ஆனால் சில தலைவர்கள் தங்களுக்காக சொகுசான குளியல் சவர்களை அமைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
Also Read: Chennai Power Shutdown: சென்னை மின்தடை பகுதிகள்: இன்று ( 05.02.2025) எங்கெல்லாம் தெரியுமா?
ராஜீவ் காந்தி மீது தாக்குதல்:
டெல்லியில் இருந்து ஒரு ரூபாய் அனுப்பினால், மக்களுக்கு 15 பைசா மட்டுமே கிடைக்கும் என்று ஒரு பிரதமர் ( ராஜீவ் காந்தியை மறைமுகமாக குறிப்பிட்டு ) ஒப்புக்கொண்டார். "நம் நாட்டில் ஒரு பிரதமர் இருந்தார், ஒரு பிரச்சனையை அடையாளம் கண்டு, டெல்லியில் இருந்து ஒரு ரூபாய் அனுப்பினால், 15 பைசாதான் அடிமட்டத்தை எட்டியது. அப்போது மத்தியில் இருந்து பஞ்சாயத்து மட்டம் வரை இருந்த ஒரே கட்சி கட்சி, யாரென்று தெரியும் ” என்று பிரதமர் மோடி கூறினார்.
முன்பெல்லாம் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகளில் ஊழலைப் பற்றியதாகத்தான் இருந்தது. 10 வருடங்கள் கடந்துவிட்டதால் பொதுமக்களுக்குப் பயன்படும் கோடிக்கணக்கான ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணத்தை நாங்கள் மாளிகைகள் கட்ட பயன்படுத்தவில்லை, அதற்கு பதிலாக அந்த பணத்தை நாட்டை கட்டியெழுப்ப பயன்படுத்தியுள்ளோம்.
ராகுல் காந்தி மீது தாக்குதல்:
“இன்று சிலர் நகர்ப்புற நக்சல்களின் மொழியை வெளிப்படையாகப் பேசுவதும், இந்திய அரசுக்கு சவால் விடுவதும், அதற்கு எதிராகப் போராடுவதும் துரதிர்ஷ்டவசமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.இவ்வாறு பேசுபவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டமோ, தேசத்தின் ஒற்றுமையோ புரியவில்லை. ஏழு தசாப்தங்களாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் அரசியலமைப்பு உரிமைகள் பறிக்கப்பட்டன, இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு மட்டுமல்ல, இந்தப் பகுதி மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியாகும்.
அரசியலமைப்பு சட்டத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வாழ்பவர்கள், முஸ்லிம் பெண்களை எப்படி கஷ்டத்தில் தள்ளினார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள் என்று ராகுல்காந்தியை கடுமையாக தாக்கி பேசினார். "அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நாங்கள் வாழ்கிறோம், அதனால்தான் நாங்கள் வலுவான முடிவுகளை எடுக்கிறோம். பாரபட்சம் காட்டும் உரிமையை எங்கள் அரசியலமைப்பு வழங்கவில்லை.
அரசியலமைப்பை தங்கள் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு வாழ்பவர்களுக்குத் தெரியாது, நீங்கள் முஸ்லிம் பெண்களை என்ன மாதிரியான சிரமங்களுக்கு உள்ளாக்கினீர்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.