உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள கிராமத்தில், ஒரு பாழடைந்த கால்வாயில், 22 வயது பட்டியலின பெண் கைகள் கட்டப்பட்டு , காயங்களுடன் இறந்த நிலையில் இருந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் இறந்த நிலையில் இருப்பதை , அவரது மைத்துநர், நேற்றைய தினம் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.
உடல் முழுவதும் காயங்கள்:
உ.பி அயோத்தியில் உள்ள கிராமத்தில் மர்மமான முறையில் 22 வயதுடைய பெண் சடலமாக கண்டறியப்பட்டுள்ள சம்பவமானது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து, பெண்ணின் தரப்பு குடும்பத்தினர் தெரிவிக்கையில், “ அவரை வியாழக் கிழமை இரவு முதலே காணவில்லை. நேற்றைய தினம் காலையில் கிராமத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இறந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அப்போது, அவரது கை-கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டிருந்ததாகவும், உடலில் பல ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்ததாகவும் ,அவரது கண்கள் காணவில்லை என்றும், உடலில் ஆழமான காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் இருந்ததாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
காவல்துறை மீது குற்றச்சாட்டு:
இச்சம்பவம் குறித்து, பெண்ணை காணவில்லை என்று புகார் அளித்த பிறகும்கூட அதிகாரிகள் தீவிரமாகத் தேடவில்லை என்றும், காவல்துறை சரியாக செயல்படவில்லை என்றும் பெண்ணின் தரப்பு குடும்பத்தினர், குற்றம் சாட்டு வைக்கின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி வட்ட அதிகாரி தெரிவிக்கையில். “ மரணம் அடைத பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருப்பதாகவு, பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், அடுத்தகட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும் என்றும், பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன், அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.
”பிரதமர் மோடியிடம் போகிறேன்”
இந்நிலையில், அயோத்தியில் உள்ள பைசாபாத் மக்களவைத் தொகுதியின், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்பி-யான பிரசாத், செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கண்ணீர் விட்டு அழுதார். அவர் தெரிவித்ததாவது "இந்த கொடூரமான குற்றங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன. 3 நாட்களாக காணாமல் போன ஒரு தலித் குடும்பத்தின் மகளின் உடல் அயோத்தியில் உள்ள சஹானாவன் கிராம சபையின் சர்தார் படேல் வார்டில் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அவரின், இரண்டு கண்களும் பிடுங்கப்பட்டிருக்கின்றன.
இந்த அரசால், நீதி வழங்க முடியாது. என்னை டெல்லி, நாடாளுமன்றத்திற்குச் செல்ல விடுங்கள். இந்த விஷயத்தை பிரதமர் மோடியின் முன் வைக்கிறேன், எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், நான் ராஜினாமா செய்வேன்," என்று தெரிவித்து கண்ணீர்விட்டு அழும் காட்சியை பார்க்க முடிகிறது. அப்போது, அருகில் இருந்தவர்கள் , அவரை தேற்றும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
இந்நிலையில், மர்மமான முறையில் பெண் உயிரிழந்த சம்பவமானது, அயோத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: பட்ஜெட்டில் ரூ.14.8 லட்சம் கோடி கடன் வாங்கி, 12 லட்சம் கோடி வட்டியா.! ஷாக்கான மக்கள்