பழனிச்சாமி தினந்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறார். இந்த செய்தி அவருடைய அண்டப் புழுகு, ஆகாச புழுகு என்பதற்காக சான்றாக இருக்கிறது என்று ஓபிஎஸ் அதிரடி பேட்டியளித்துள்ளார்.
 
பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.
 
மீண்டும் இணைவதற்கு ஓபிஎஸ் தூது அனுப்புகிறார் என்று இ.பி.எஸ்., கூறியது குறித்த கேள்விக்கு
 
பழனிச்சாமி தினந்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறார். இந்த செய்தி அவருடைய அண்டப் புழுகு, ஆகாச புழுகு என்பதற்காக சான்றாக இருக்கிறது.
 
மாநாட்டிற்கு பிறகு தொண்டர்களின் மனநிலை குறித்த கேள்விக்கு
தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதற்கு திருச்சி மாநாட்டின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண