திமுகவில் வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்ததால் வெளியேற்றப்பட்ட வைகோ 1994ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை (மதிமுக) தொடங்கினார். மதிமுக ஜெயலலிதாவுடைய அதிமுக கூட்டணியில் இருந்து, பின்னர் விஜயகாந்தை முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணி அமைத்ததிலிருந்து, கடைசியாக ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன் என்று திமுகவுடன் மீண்டும் கூட்டணியாக வந்து இணைந்து, தன் மகனுக்கு ம.தி.மு.க வில் பதவி அளித்து ஒரு சக்கரம் சுற்றி வந்துவிட்டாரென்றால், அவருடன் தொடங்கிய தலைசிறந்த பேச்சாளர் என்ற பெயரை பெற்ற நாஞ்சில் சம்பத்தும் ஒரு சுற்றை முழுமை பெற செய்திடுவார் என்று அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.


'மீண்டும் ம.தி.மு.க.,வில் இணைகிறாரா நாஞ்சில் சம்பத்?'வைகோ மகனுக்கு முழு ஆதரவு!


நீண்ட காலமாக, ம.தி. மு.க., கொள்கை பரப்பு செயலராக இருந்த சம்பத், பொதுச் செயலர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியை விட்டு விலகினார். விலகியதும் கடந்த, 2012ல், அப் போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்து, கொள்கை பரப்பு துணைச்செயலாலர் பதவியுடன், 'இன்னோவா' காரையும் பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா, தினகரனை ஆதரித்தார். பின், தினகரனிடம் இருந்து விலகி, முழுநேர அரசியலில் இருந்து விலகுவதாகவும் இனி இலக்கிய கூட்டங்களில் மட்டும் பஙகேற்க போவதாகவும் அறிவித்தார். ஆனால் அதன் பின்னர் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்ட ணியை ஆதரித்து பேசினார்.



கடைசியாக தி.மு.க கூட்டணியை ஆதரித்து பேசியிருந்தாலும் இதுவரை எந்த ஒரு கட்சி யிலும் சேராமல் இருக்கும் சம்பத், வைகோ மகன் துரைக்கு ம.தி.மு.க.,வில் பதவி வழங்கியதற்கு ஆதரவாக பேசி வருகிறார். அதுகுறித்து அவர் கூறுகையில் "துரையை கட்சித் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டால், அந்த முடிவை மக்களும் ஏற் றுக் கொள்கிற நிலைமைக்கு காலம் கொண்டு வந்து நிறுத்தும். ம.தி.மு.க., ஆயுள் முழுதும் போராடுவதற்காக பிறந்த கட்சி. தேர்தல் களத்தில் தோல்வி கண்டிருக்கலாம்; ஆனால், போர்க்களத்தில் வென்றிருக்கிறது. இது, வாரிசு அரசியல் அல்ல; வரலாற்று அரசியல்." இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில், 'நாஞ்சில் சம்பத் மீண்டும் ம.தி. மு.க.,வில் வேண்டும். இணைய 'அவருக்கு துணைப் பொதுச் செயலர் பதவி வழங்க வேண்டும். துரைக்கு உறுதுணையாக சம்பத், பிரசார பீரங்கியாக வலம் வருவார்' என, கட் சியினர் பதிவிட்டுள்ளனர். மீண்டும் ம.தி. மு.க.,வில் சம்பத் இணைவதற்கு. வைகோ அழைப்பு விடுப்பார் என, அக்கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.


Also Read: விஸ்வாசம்-அண்ணாத்த: அச்சு மாறாத ஒரே ட்ரெய்லர்... இயக்குனர் சிவா சொன்ன விளக்கம் இது தான்!


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண