மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: பீகார் மாநிலம் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பான தங்களின் நிலைப்பாட்டின் முடிவுகள் குறித்து ஜூன் 23-ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதனை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது.
இந்தியாவில் பிடிக்காதவர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை ஏவி விடுவது அரசியல் ரீதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நீதிமன்றம்தான் இறுதி முடிவு எடுக்கவேண்டும். அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தில் நெருக்கடி கொடுப்பது மனிதாபிமானமற்ற செயல். திமுகவினர் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தேவையற்ற விமர்சனங்களை வைப்பது நாகரிகமற்ற செயல் என்று நாங்கள் கருதுகிறோம்.
அம்பேத்கர், பெரியாரை படிக்க வேண்டும் என விஜய் சொன்ன கருத்தை வரவேற்கிறேன் - பாஜக ஸ்ரீனிவாசன்
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மாணவர்களை சந்திக்கிறார். நடிகர் விஜய் இதுவரை அரசியல் கட்சியை தொடங்கவில்லை. கட்சி தொடங்கும்போது அவருடைய அரசியல் சித்தாந்தத்தை தெளிவுப்படுத்த வேண்டும். நடிகர் விஜய் அவருடைய ரசிகர்களை அரசியல் மையப்படுத்த வேண்டும், சினிமாவில் இருப்பவர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லவில்லை. சினிமாவை மட்டுமே மூலகாரணமாக கொண்டிருக்கக் கூடாது. பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய தலைவர்களைப் பற்றி மாணவர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று விஜய் சொல்வது நல்ல கருத்து. திராவிட அரசியலையும், தமிழ் தேசிய அரசியலையும் சார்ந்து யார் அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தாலும் அதனை வரவேற்கிறோம்.
IAS Officers Transfer: தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்..! யார் யார் மாற்றம்..?
திராவிடம் சார்பாக இருந்தால்தான் தமிழ்நாட்டில் அரசியலில் ஜெயிக்க முடியும். திராவிட அரசியலுக்கும், தமிழ் தேசிய அரசியலுக்கும் எதிராக இருப்பவர்கள் தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது. திராவிட அரசியலையும் தமிழ் தேசிய அரசியலையும் எதிர்ப்பதால்தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ளது. விஜய் பெரியார, அம்பேத்கர் காமராஜரை பற்றி எல்லாம் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று கூறுவது பாரதிய ஜனதாவிற்கு பிடிக்கவில்லை. எனவே, பாரதிய ஜனதா கட்சி நடிகர் விஜயை எதிர்ப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை” என்றார். அப்போது, மாநில செயலாளர் நாகை சையது முபாரக், மாவட்ட செயலாளர் ஹாஜாசலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.