தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது, குறிப்பிடதக்கது. இதில் கருப்பு கொடி மற்றும் தி.மு.க அரசை கண்டிக்கும் பதாகைகளை ஏந்தியபடி நூற்றுக்கும் மேற்பட்டோர் அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.




சாலையின் இரு புறமும் நின்றபடி, தி.மு.க அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மதுரை மாவட்டத்தில்  அனைத்து வார்டுகளிலும் இதே போன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. தி.மு.கவினருக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தி.மு.க பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி..,’பொழுது போகாததால் அ.தி.மு.கவினர் போராட்டம் செய்கின்றனர், என்னுடைய துறையை பற்றி குறைகளை விவாதிக்க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.




தமிழ்நாடு முதல்வர் மரக்கன்றுகள் நட அறிவுருத்தளுக்கு  இணங்க மதுரை மாவட்டத்தில் நாளை முதல் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட உள்ளோம். அ.தி.மு.கவினர் இன்று தமிழ்நாடு முழுவதும் தி.மு.கவினர் எதிர்த்து நடத்திய போராட்டம் குறித்த கேள்விக்கு ? பொழுது போகாமல் அ.தி மு.கவினர் இப்படி போராட்டம் செய்கின்றனர். 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தபோது அவர்களால் செய்ய செய்யவில்லை. நாங்கள் வந்த ஒரு மாததத்தில் பலவற்றை செய்துள்ளோம். அதிகரித்து வந்த கொரோனா நோய் தொற்றில்  இருந்து மக்களை பாதுகாத்துள்ளோம். ”தமிழன்னைக்கு சிலை வைப்போம், மதுரையை சிங்கப்பூருக்கு இணையாக மாற்றுவோம்” என்று கூறினார்கள், ஆனால் அப்படி எந்த மாற்றமும் நடக்கவில்லை.

 



மேலும் செய்திகள் படிக்கே இங்கே கிளிக் செய்யவும் - https://tamil.abplive.com/news/madurai/inscriptions-pillars-pottery-keeranur-becomes-like-a-keeladi-excavation-10763

 

நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவற்றை படிப்படியாக தமிழ்நாடு முதல்வர் செய்து வருகின்றார். 10 ஆண்டுகளில் அவர்கள் செய்யாதவற்றை நாங்கள் செய்துள்ளோம். நாங்கள் பலவற்றை வெளிப்படையாக செய்துள்ளோம். பத்திரப் பதிவுத் துறையில் நடந்த பல மோசடிகளை வெளியே கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம். இதுவரை இருந்த மந்திரிகள் தங்களது துறையில் தற்போது ஏதேனும் குறைகள் இருந்தால் வெளியே கூறுங்கள்  ? என கேள்வி எழுப்பினார். உண்மைக்குப் புறம்பான செய்தியை உண்மை என பேசக்கூடிய வல்லமை உடையவர் ஆர்.பி உதயகுமார்,  எனது துறையை அவர் நேரிடையாக நாளை விவாதிக்கத் தயாரா?  என சவால்விடுத்தார்.

தமிழ்நாட்டில் சட்ட மன்ற தேர்தலுக்கு பின் அரசியலில் பெரும் அமைதியாக இருந்த சூழலில் அ.தி.மு.க போராட்டம் நடத்தியதிற்கு பின் மீண்டும் அரசியலில் விறு, விறுப்பு ஏற்பட்டுள்ளது.