மயிலாடுதுறை நகராட்சியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சந்திப்பு கூட்டம் திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. திமுக மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களை பாராட்டினார். 




Russia Ukraine War: விட்டுக்கொடுக்காத ரஷ்யா; உதவி கோரும் உக்ரைன் - போருக்கு காரணம்தான் என்ன?


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்களுக்கு தமிழக முதல்வர் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். தமிழகத்தில் சட்டசபை தேர்தலைவிட உள்ளாட்சி தேர்தலில் தமிழக முதல்வரின் செயல்பாடுகளால் 20 சதவிகிதம் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. இது கடந்த 9 மாதகாலம் ஆட்சியில் தமிழக முதல்வர் ஆளும்கட்சி வெற்றி பெற்ற தொகுதி மட்டுமின்றி, எதிர்கட்சிகள் வெற்றிபெற்ற தொகுதி உட்பட 234 தொகுதியிலும் நலத்திட்ட உதவிகளை கொண்டு சேர்த்ததோடு, வளர்ச்சி பணிகளையும் முதல்வர் செய்தார். அதனால் விளைவாக 20 சதவிகிதம் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. 




Russia Ukraine War: “யாரும் பயப்பட வேண்டாம்; ராணுவம் வேலையை செய்கிறது” - உலக நாடுகளிடம் உதவி கோரும் உக்ரைன்


இந்திய பிரதமர் மோடி தனக்கு வாக்களிக்காத மாநிலங்களை புறக்கணிக்கின்ற நிலையில் அவர் பிரதமராக இருந்தும் வாக்கு வங்கி உயரவில்லை. தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் முதல்வர் பாடுபட்டு வருகிறார். அதன் வெளிப்பாடாகத்தான் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு மக்கள் மாபெரும் வெற்றிய தந்துள்ளனர். 




Russia Ukraine Conflict: உக்ரைனில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு - திருப்பி விடப்பட்ட இந்திய மீட்பு விமானம்


திமுக வெற்றி பெற்ற பகுதி மட்டுமின்றி மாற்றுக்கட்சியினர் வெற்றி பெற்ற பகுதிக்கு பாரபட்சமின்றி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். மயிலாடுதுறை பகுதி மக்களின் முக்கிய பிரச்னைகளான பாதாள சாக்கடை கழிவுநீர், குப்பைகள் மேம்படுத்துதல், குடிநீர், சாலை, தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றதும் நல்லமுறையில் செய்துகொடுக்க வேண்டும் என்றார். இதில் மயிலாடுதுறை பாராளமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Russia Ukraine War: ரஷ்யாவின் பாதையில் குறுக்கே யார் வந்தாலும் வரலாறு காணாத அழிவு உறுதி...! புதின் எச்சரிக்கை