உக்ரைன் நாட்டின் மீது இந்திய நேரப்படி இன்று காலை முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. அந்த நாட்டின் ராணுவ தளவாடங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ரஷ்யா விளக்கமளித்தாலும், இந்த போரில் ரஷ்யாவின் குறுக்கே யார் வந்தாலும் அவர்களுக்கு வரலாறு காணாத அழிவு உறுதி என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே சமயம், ரஷ்யாவின் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள உக்ரைன் உலக நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம், பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்ட உக்ரைன் அதிபர் ராணுவம் தங்களது வேலையை செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.