Watch Video: ‛அவனெல்லாம் ஒரு தலைவனா...’ பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் சாடிய அமைச்சர் காந்தி!

‛‛அவனெல்லாம் ஒரு தலைவனா அவனை பற்றி எல்லாம் நீ கேட்கலாமா?? வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும் அவன், படித்தவனை போல பேச வேண்டாமா’’ -அமைச்சர் காந்தி

Continues below advertisement

அவனெல்லாம் ஒரு தலைவனா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை  பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒருமையில் பேசி விமர்சித்தtர் அமைச்சர் காந்தி.

Continues below advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை அருகே உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் காந்தி பங்கேற்று உதவிகளை வழங்கினார்.

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காந்தி:


அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறையினரின் நடவடிக்கை பழிவாங்கும் செயலா? என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர்கள் 10 ஆண்டுகள் நடத்திய ஆட்சி, மேற்கொண்ட செயல்கள் குறித்து அனைவரும் அறிந்ததே இது நடைமுறையான செயல்தான் என்றார். 

கருத்து சுதந்திரம் திமுக ஆட்சியில் தடுக்கப்படுவதாக அண்ணாமலை குறிப்பிட்டது குறித்து பத்திரிகையாளர் கேட்டதற்கு, 

அவனெல்லாம் ஒரு தலைவனா அவனை பற்றி எல்லாம் நீ கேட்கலாமா?? வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும் அவன், படித்தவனை போல பேச வேண்டாமா, பதவி என்பது சில காலம் தான், மத்தியில் ஆட்சியில் இருப்பதால் தைரியமாக பேசி வருகிறான் என ஒருமையில் விமர்சித்த அவர்,

தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை ஸ்டாலின் வழங்கி வருகிறார். முடிந்த அளவிற்கு எதிர்க்கட்சியினர் புண்படாத வகையிலேயே நடந்துக்கொள்கிறார். அனைவருக்குமா நல்லாட்சி, மக்களாட்சியை அவர் வழங்கி வருவதாக பேசினார்.

இதோ அந்த வீடியோ...

மேலும் படிக்க..

 

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

 

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

 

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

 

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

 

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

 

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

 

 

 

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola