மயிலாடுதுறையில் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியில் நல வாரிய உறுப்பினர்கள் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு கல்வி, விபத்து, ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித்தொகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கொரோனா ஊரடங்குக்கு பிறகு முதல் முறையாக 50 ஆயிரம் பேருக்கு உதவி தொகைகள் வழங்கப்பட்டன.




அதன் பின்னர் மூன்று மாதத்திற்கு பிறகு எஞ்சிய 57,000 தொழிலாளர்களுக்கு உதவி தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இதுவரை சுமார் 10 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள். அதேபோல் 18 நல வாரியங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது. பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ ஒன்றுக்கு ஒரு லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கிய ஒரே முதல்வராக தமிழ்நாடு முதல்வர் விளங்குகிறார். 


Oscar Movies OTT Steaming : ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றிய திரைப்படங்கள்... எந்தெந்த ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்... விரிவான தகவல் இதோ




மேலும், படிப்பு, திருமணம், விபத்து இழப்பீடு தொகை ஆகியவை திமுக ஆட்சியில் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையான தனி நலவாரிய கோரிக்கை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இக்கூட்டத்தில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார்,  திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


The Elephant Whisperers-க்கு ஆஸ்கர் விருது .. ரகு, பொம்மியை வளர்த்தது எப்படி..? - பெள்ளி பேட்டி




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண