இலவச மின்சார திட்டத்தைக் கொண்டு வந்த பெருமைக்குரியவர் கலைஞர்- ஆ.ராசா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். முத்தமிழ் அறிஞரின் கலைஞரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் திமுக நகர கழக சார்பாக நகர செயலாளர் சுப்பராயன் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

Continues below advertisement

Diwali 2023 TV Movies: களைகட்ட போகும் தீபாவளி.. டிவியை தெறிக்க விடப்போகும் புதிய படங்கள்.. முழு விபரம் இதோ..!


தற்போது இந்நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி ஆட்சியில் 48 ஆயிரம் கிராமங்களுக்கு நான் தான் மின்சாரம் வழங்கினேன் என மார்தட்டிக் கொள்ளும் மோடிக்கு, நான் ஒன்று சொல்கிறேன். 1971 - 72 ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரத்தை வழங்கிய பெருமைக்குரியவர் கலைஞர். மனிதனே மனிதன் சுமந்து இழுக்கும் கை ரிக்ஷாவை மாற்றி அமைத்து, கை ரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷா வழங்கிய பெருமைக்குரியவர் கலைஞர் ஆவார். மேலும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழுக்கும் கலைஞருக்கும் என்ன தொடர்பு என பேசி இருந்தார். அதற்கு நான் திருச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கூறினேன், அரசு நிகழ்ச்சியின் போது உங்களது கனத்த சரிதத்தை எழுந்து நிற்க வைத்து அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை கொண்டு வந்து அரசாணை பிறப்பித்த பெருமைக்குரியவர் கலைஞர் ஆவார் என்றேன்.

CM Stalin: உழைப்பது இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல.. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு..


எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் போது விவசாயிகள் 1 யூனிட்டுக்கு 1பைசா குறைப்பதற்காக போராட்டம் நடத்தி துப்பாக்கிச் சூடு வாங்கினார்கள், இது வரலாறு.  ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் விவசாயி சங்கத்தினரை அழைத்த கலைஞர் குறைகளை கேட்டு அறிந்து இனி விவசாயிகள் மின்சாரத்துக்கு ஒரு பைசா கூட கட்டத் தேவையில்லை என விவசாயிகளின் மீது  அக்கறை கொண்டு இலவச மின்சார திட்டத்தைக் கொண்டு வந்த பெருமைக்குரியவர் கலைஞர். இதே திட்டத்தை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மற்றும் பஞ்சாபில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

Photography Course: ஃபோட்டோகிராபி கற்றுக்கொள்ள ஆசையா? ஒரு மாத கால இலவச வகுப்பு; விண்ணப்பிப்பது எப்படி?


மேலும் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என சட்டம் அமல்படுத்திய  பெருமை  கலைஞரையே சாரும் என தெரிவித்தார். மேலும்  இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் மற்றும்  காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

JEE Main : ஜேஇஇ மெயின் தேர்வு; இன்று முதல் நவ.30 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?

Continues below advertisement