செங்கல்பட்டு மாவட்டம் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், இந்தியன் வங்கி இணைந்து நடத்தும் இணைந்து நடந்தும் ஒரு மாத கட்டணமில்லா வீடியோகிராபி, ஃபோட்டோகிராபி 30 நாள்கள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 


ஃபோட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி கற்றுக்கொள்ள வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதிகள் என்னென்ன என்பதை காணலாம்.


கல்வி மற்றும் பிற தகுதிகள்


இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


விவரம்


இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவர்களுக்கு சீருடை, காலை, மதிய உணவு, காலை மற்றும் மாலை தேநீர் இலவசமாக வழங்கப்படும். 


பயிற்சி காலத்தில் கேமரா, வீடியோ கேமரா போன்ற உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். 


பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.


பயிற்சி வகுப்பு நேரம்:


30 நாள்களுக்கு தினமும் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். 


விண்ணப்பிப்பது எப்படி?


விருப்பம் உள்ளவர்கள் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். 


நேர்காணல் நடைபெறும் நாள் - 06.11.2023


நேர்காணல் நடைபெறும் இடம்:


https://maps.app.goo.gl/5Tx9aKQ3VAYCJD5U8 - என்ற இணைப்பை க்ளிக் செய்து நேர்காணல் நடைபெறும் இடத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 


மேலும் விவரங்களுக்கு....


இந்தியன் வங்கு ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்


கோகுலம் RPN வணிக வளாகம், முதல் தளம்,
எண்:24, மகாலெட்சுமி நகர், திம்மாவரம்,
செங்கல்பட்டு - 603 101


தொடர்புக்கு..


8883735122


7010107832


7092787785


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


அலுவலக உதவியாளர்


பணியிடம்


தொண்டாமுத்தூர் ஊராட்சி


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 32 வயதுக்கும் மிகாமலும் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை


இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


எப்படி விண்ணப்பிப்பது?


https://coimbatore.nic.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்து செய்து தேவயான ஆவணங்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும். 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
தொண்டாமுத்தூர்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.11.2023


இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://drive.google.com/file/d/1KeSQJl8ERlUJ9QXA7zvq01xqxNYKLgDE/view - என்ற இணைப்பை க்ளிக் செய்து காண்லாம். 




மேலும் வாசிக்க..


Vijay Speech: '2026-ல் கப்பு முக்கியம் பிகிலு’ .. அரசியல் எண்ட்ரீ குறித்து விஜய் கொடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு வேண்டுகோள்..!


Vijay Speech: '2026-ல் கப்பு முக்கியம் பிகிலு’ .. அரசியல் எண்ட்ரீ குறித்து விஜய் கொடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு வேண்டுகோள்..!